மஹியங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நானுஓயா டெஸ்போட் பகுதியில் வைத்தே இன்று அதிகாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் , லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் வீதியில் குடைசாய்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லொறியில் இருந்த 3 கியூப் மணலில் 1 கியூப் மணல் வீதியில் கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
