பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான இடங்களை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று பதுளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் இ.தொ.காவின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் இணைப்பாளருமான செந்தில் தொண்டமான், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள், தமிழ் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், தோட்ட நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பதுளை மாவட்டத்தில் உடனடியாக கவனம் செலுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட பாடசாலைகள் விவரம் வருமாறு,
1.டியனாகல
2.ஸ்பிரிங்வெலி மேமலை
3.ரொசட்
4.லியங்காவெல
5.தம்பேதென்ன
6.கனவரெல்ல
7.யூரி
8.தெஹிகல
9.மீரியபெத்த










