மண்சரிவு – மஸ்கெலியா – நோட்டன் வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

மஸ்கெலியாவிலிருந்து –  நோட்டன் நோக்கி செல்லும் பிரதான வீதியில்  இன்று அதிகாலை  மண்மேடு சரிந்து விழுந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

அப்புகஸ்தென்ன  மற்றும் நான்காம் கட்ட ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலேயே பாரிய மண்மேடு சரிந்துள்ளதால் பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே,  மஸ்கெலியா – நோட்டன் வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அதேவேளை, அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கெளசல்யா

Related Articles

Latest Articles