மதுபோதையில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுராதபுரம் கும்மிச்சங்குளம் பகுதியில் நேற்றைய தினம் ரோந்து நடவடிக்கையில் சென்று கொண்டிருந்த பொலிஸாரே இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண் மாணவி ஒருவரும் அடங்குவதாகவும் இவர்கள் அநுராதபுரம் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் மாணவர்கள் மூவரையும் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் பெண் மாணவியையும் ஆண் மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதியன்று மாணவர்களது பெற்றோர்களையும் சம்பவத்துடன் தொடர்புடய மாணவர்கள் மூவரையும் நீதிமன்றில் ஆஜராகும்படி அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
