மத்திய மாகாணத்தில் இவ்வருடம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாறு 1048 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் வருட ஆரம்பத்தைவிட இறுதிப்பகுதியில் அவ் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 779 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 217 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 52 பேரும் இதுவரை இனம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம் கடந்த வருடம் இதே காலப்பகுதியில் மத்திய மாகாணத்தில் 4140 பேர் வரை இனம்காணப்பட்டதாகவும் மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
