மதப்பிரிவினைகளை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை அரசாங்கம் கடுமையாக ஒடுக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனவாதம் மற்றும் மதவெறியைப் பரப்புவதற்கு இடமளிக்க மாட்டாரென்றும் வஜிர அபேவர்த்தன வலியுறுத்தினார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் விசேட கருத்து வெளியிடும் போதே வஜிர அபேவர்த்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஏற்றதன் முதன்மையான நோக்கம் வீழ்ந்த நாட்டைக் கட்டியெழுப்புவதே எனத் தெரிவித்துள்ளார்.










