மனிதனுக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்!

மருத்துவ உலகில் முதன்முறையாக மனிதர் ஒருவருக்கு, பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்.

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் Massachusetts என்ற மருத்துவமனையில்தான் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது.

ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நோயாளி ஒருவர், இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிபட்டு வந்துள்ளார்.

ஒரு நிலையில் இவரின் இரண்டு சிறுநீரகமும் செயலிழக்கவே… 2018ம் ஆண்டு, இதே மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துக்கொண்டு குணமாகியுள்ளார்.

ஆனால் அவரின் சந்தோஷம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. ஐந்து வருடங்களுக்குள்ளாகவே அவருக்கு, மறுபடியும் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துள்ளது. மறுபடி கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள வரிசையில் நிற்கும் நிலை… ஆகவே இதே மருத்துவமனையில் டயாலிஸஸ் சிகிச்சையின் உதவியால் உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனாலும் டயாலிஸஸும் ஓரளவிற்கு மேல் ரிக் ஸ்லாய்மென் கைக்கொடுக்கவில்லை இறுதி கட்டத்தை எட்டியிருந்தார்.
இம்மருத்துவமனையில், மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் டாட்சுவோ கவாய், தனது கடைசி முயற்சியாக நோயாளியான ரிக்ஸ்லாய்மென்னிடம், பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி பார்க்கலாம் என்று அனுமதி கேட்டுள்ளார். நோயாளியும் இறுதிகட்டத்தை நெருங்கியிருந்தபடியால், டாக்டரின் ஆலோசனைக்கு ஒத்துக்கொண்டார். இதனால், மருத்துவர்கள் குழுவானது இவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, அதில் வெற்றியும் கண்டுள்ளது.

இதை பற்றி டாக்டர் டாட்சுவோ கவாய், கூறும் பொழுது, “பன்றியின் சிறுநீரகம் மனித சிறுநீரகத்தின் அளவை ஒத்ததாக இருக்கும். பன்றியின் இரத்த நாளங்களை நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கும் பொழுது, நாங்கள் எதிர்பார்த்தபடி உடனடியாக அது வேலை செய்ய ஆரம்பித்து, நோயாளியின் உடலிலிருந்து சிறுநீர் பிரிய ஆரம்பித்தது. இது எங்கள் ஆராய்ச்சி குழுவிற்கு கிடைத்த வெற்றி. இதுவரை நான் பார்த்த சிறுநீரகத்தில் இதுதான் அழகிய சிறுநீரகம்” என்றும் பன்றியின் சிறுநீரகத்தை வர்ணித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளியான ரிக் ஸ்லாய்மெனின் உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், இன்னும் சில நாட்களில் இவர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ”இது வெற்றிபெற்றால், பல நோயாளிகள் பலனடைவார்கள். (ஜீனோட்ரான்ஸ் பிளாண்ட்கள் ) விலங்குகளின் உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுதலால் உறுப்பு பற்றாக்குறை குறையும்” என்றும் கூறியுள்ளார்.

 

 

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles