விபத்தில் மனைவி உயிரிழந்துவிட்டார் என தெரிந்ததும், துக்கம் தாங்க முடியாமல் கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட சம்பவமொன்று ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹொரணை ,இங்கிரிய பகுதியில் கடந்த 20ஆம் திகதி இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 20 வயதுடைய யுவதி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
விபத்தில் அவரது கணவர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைபெற்றுவந்தார்.
வீடு திரும்பிய கணவனுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு கிடைத்து சென்ற போது மனைவி உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.
மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் வீட்டிற்கு வந்தவுடன் விஷம் அருந்தியுள்ளார்.
குடும்பத்தினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இங்கிரிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
