மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்த கணவர்

தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரை அப்பெண்ணின் கணவர் கொலை செய்துள்ள சம்பவம் ஊரகஸ்மன்ஹந்திய, ரந்தொடுவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குருஹெங்கொட, ரந்தொடுவில, ஆசாரிவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (30) அதிகாலை கணவர் திடீரென வீட்டிற்கு வந்த போது, அவரது 24 வயது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் வீட்டில் இருந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவர் கத்தியால் தலையில் தாக்கியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் உரகஸ்மன்ஹந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய கணவர் பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles