மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவன்: நாவலப்பிட்டியவில் பயங்கரம்: பின்னணி என்ன?

குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தனது மனைவியை கூர்மையான கத்தியால் குத்தியும் , தலையில் கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று4 ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி, செம் ரோக் பகுதியைச் சேர்ந் கயானி தில்ருக்ஷி குமாரி என்ற மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை கொலைசெய்ததாக கருதப்படும் பெண்ணின் 42 வயதான கணவர் , 4 ஆம் திகதி காலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேற்படி தம்பதியினர் மூன்று குழந்தைகளும் நாவலப்பிட்டியின் பல்லேகம பகுதியில் வசித்து வந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பெண்ணின் கணவருக்கு தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக பிரிந்து வசித்து வந்துள்ளனர் .

இக்காலப்பகுதியில் , மேற்படி பெண் கொழும்புப் பகுதியில் வேலை செய்து வந்தநிலையில் , 3 ஆம் திகதி தனது திருமணமான மகளின் வீட்டிற்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் , சந்தேக நபர் மனைவியை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் தனது முச்சக்கர வண்டியில் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார் .

இச்சந்தர்ப்பத்தில் மனைவி யாரோ ஒரு நபருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும், கோபமடைந்த அவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அவரைத் தாக்கியுள்ளார்.

கத்தி உடைந்ததால்,மேலும் ஒரு கத்தியை எடுத்து தனது மனைவியை குத்தியுள்ளதோடு. காப்பாற்ற வந்த தனது மகளையும் கத்தியால் தாக்கி, பின்னர் ஒரு பெரிய கல்லை மனைவியின் தலை மீது போட்டுள்ளார்.
சந்தேக நபருக்கும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவரும் அவரது மகளும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles