டிக்கோயா மனிக்கவத்த இரண்டாம் பிரிவைச்சேர்ந்த இளைஞரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
36 வயதுடைய செல்வராஜ் கிருஸ்ணமூர்த்தி என்பவரே பொகவந்தலாவை கிவ் மேற்பிரிவு தோட்டத்திலுள்ள மனைவியின் வீட்டுக்குசென்றிருந்தவேளை மரணித்துள்ளார். திருமணமாகி ஆறு மாதங்களே ஆகின்றன.
முகம்கழுவசென்றவேளை வழுக்கி விழுந்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற பின்னரே இவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்பட்டாலும், அவரின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரேதபரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது.
அத்துடன், இது கொலையா அல்லது ஏதேச்சையாக நடந்த மரணமா என்பது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்