” அரிசி ஆலை உரிமையாளர்களிடம் நான் அடிபணியமாட்டேன். அஞ்சவும் மாட்டேன். (மம பயத் ந, நயத் ந – நான் எவருக்கும் கடனும் இல்லை, பயமும் இல்லை)” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சூளுரைத்துள்ளார்.
” நாட்டிலுள்ள வர்த்தக மாபியாக்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாகவே இருக்கின்றேன். அதற்காக அன்று முதல் இன்றுவரை போராடுகின்றேன். இனியும் போராடுவேன்.

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நான் துளியளவும் பயம் இல்லை. அவர்களுடன் டீலும் இல்லை. அடிபணியவும் மாட்டேன்.
அரிசி இறக்குமதி செய்யப்படுவதற்கு விவசாய அமைச்சர் என்ற வகையில் நான் இன்னும் எதிர்ப்பு. எனினும், அரசி தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதால்தான் இறக்குமதி செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளது. இன்று அரிசி வரும். அதன் பின்னர் சந்தையில் விலை குறையும்.” என்றும் விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.










