மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திலுள்ள கட்டடத்தின் கூரையில் அங்கு கடமையாற்றிவரும் ஆணொருவர் நேற்று பகல் தூக்கில் தொங்கி உயிர் மாய்த்துக்கொண்டுள்ளார்.
இருதயபுரம் இரண்டாம் குறுக்குவீதியை சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான கிலெனி அலோசியஸ் என்பவரே இவ்வாறு தவறான முடிவை எடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இவர் வழமைபோல மாயானத்தில் கடமையாற்றச் சென்றிருந்த நிலையில் நேற்று பகல் 2 மணியளவில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தின் கூரையில் கயிறுட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு – ( எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை எக்குன்பது தீர்வல்ல. எது கோழைத்தனமான முடிவாகும். தற்கொலையை ஊக்குவிம் நோக்கில் அல்ல, தகவலுக்காகவே இந்த செய்தி பதிவிடப்படுகின்றது.)
