மரம் முறிந்து விழுந்து இளைஞன் பலி: நமுனுகுலவில் சோகம்

நமுனுகுல பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள மரத்தை வெட்டியவேளை, அது குறித்த நபரின் மேல் விழுந்தமையால் படுகாயம் அடைந்த நிலையில் பல்லகெடுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது பல்லகெடுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நமுனுகுலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles