மலாலி நாட்டு துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்

கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு இராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியாகவுள்ள சவுலோஸ் கிளாஸ் சிலிமா (வயது 51) உட்பட 9 பேர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது.

மலாவி நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான போர் விமானத்தில் 9 பேரும் அந்நாட்டு நேரப்படி காலை 9.17 மணிக்கு தலைநகரில் இருந்து புறப்பட்டதாகவும், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரின் தொடர்பை இழந்ததாகவும் மலாவி ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

மாயமான விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Articles

Latest Articles