மலைநாட்டில் பல பகுதிகளிலும் நேற்றிலிருந்து தொடர் மழை பெய்துவருகின்றது. இதனால் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் தோட்டப்பகுதிகளில் வேலை முன்னெடுக்கப்படுகின்றது. மழையால் பெருமளவான தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு செல்லவில்லை.
அத்துடன், கடும் பனிமூட்டமும் நிலவுகின்றது. ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளை சூழவுள்ள பகுதிகளையும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
வளைவுகள் நிறைந்த இந்த வீதிகள் மழையுடன் வழுக்கும் நிலை காணப்படுவதால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழைகாரணமாகவும் கடும் குளிரான காலநிலை நிலவி வருகின்றது.
இதே வேளை நீர்போசன பிரதேசங்களுக்கு அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளன. சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான்பாயும் அளவினை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்










