மலையகத்தில் உச்சகட்ட பிரச்சாரம் – 2ஆம் திகதி நள்ளிரவுடன் மௌனகாலம் ஆரம்பம்!

பொதுத்தேர்தலுக்கான  பிரச்சார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுபெறவுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

மலையகத்தை பிரதான தளமாக கொண்டியங்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியனவும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பிரச்சாரங்கள் முடிவடைவதற்கு மூன்று நாட்களே எஞ்சியுள்ளதால் நள்ளிரவு தாண்டியும் பிரச்சாரங்கள் தொடர்கின்றன.

அதேவேளை, தேர்தல் விதிமுறைகளைமீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.

மௌன காலத்தில் பிரச்சாரங்கள், பேரணிகளை முன்னெடுத்தல் சட்டவிரோத நடவடிக்கையாகவே கருதப்படும். தேர்தல் முடிவடைந்த பிறகுகூட ஓரிரு நாட்களுக்கு இந்த நடைமுறை தொடரும்.

இம்முறை பொதுத் தேர்தலுக்கான 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.அத்துடன் நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

196 உறுப்பினர்களை வாக்களிப்புமூலம் தெரிவுசெய்வதற்காக இம்முறை  ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles