மலையகத்தில் பயிரிடப்படும் மரக்கறிகள் நேற்றிரவு போதுமான அளவு கிடைக்கப்பெற்றன

மலையகத்தில் பயிரிடப்படும் மரக்கறிகள் நேற்றிரவு போதுமான அளவு கிடைக்கப்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

விவசாயிகளினால் மரக்கறிகள் வழங்கப்படாமை காரணமாகக் கடந்த சில தினங்களாக பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்திருந்தன.

எவ்வாறாயினும், இன்று காலை மேலும் மரக்கறிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்தே காணப்படுகின்றன.

ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் மொத்த விலை 400 முதல் 600 ரூபாவாக விற்பனை செய்யப்படும் நிலையில், தக்காளி மற்றும் பீட்ரூட் ஆகியன 280 முதல் 320 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன், போஞ்சி கிலோவொன்று 300 முதல் 440 ரூபா என்ற மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், சில பிரதேசங்களில் மரக்கறிகளின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles