” மலையகத் தமிழர்களின் இன அடையாள விடயத்தில் நான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இ.தொ.கா வின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. ‘இந்தியத் தமிழர்கள்’ எனும் நிலைப்பாட்டை அவர்கள் கொண்டுள்ளார்கள்.
இந்திய சமுதாய பேரவையின் தலைமைப் பதவியையும் கொண்டுள்ளார்கள். ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் இது குறித்து தெளிவான நிலைப்பாடு இதுவரை வெளிப்படவில்லை.
அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நூலாசிரியர் பெ.முத்துலிங்கத்திடம் அந்த குழப்பம் இருப்பதை இந்த நூல் காட்டுகிறது.
தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் ‘மலையகத் தமிழர்’எனும் தீர்க்கமான நிலைப்பாடு இருந்தால் அதனை பாராளுமன்றில் உரையாக அல்லாமல் பிரேரணையாக முன்வைக்க வேண்டும். அத்தகைய ஒரு பிரேரணையை நான் முன்வைத்தபோது அதனை சபைக்கு வராமல் பார்த்துக் கொண்டதும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைதான் என்பதையும் நினைவுறுத்துகிறேன்.”
இவ்வாறு கூட்டணி தலைவர் மனோ கணேசன் முன்னிலையிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார்.
சமூக அபிவிருத்தி நிறவனத் தலைவர் (கண்டி) பெ.முத்துலிங்கம் எழுதிய ‘மலையகம் – நிலைமாற்றத்தினை நோக்கி’ எனும் நூல் வெளியீட்டு விழா (கடந்த சனிக்கிழமை – 2023-10-07) கொழும்புத் தமிழச்சங்கத்தில் இடம்பெற்றது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிமுகவுரை வழங்கிய நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜ் வழங்கிய கருத்துரையிலேயே மேற்கண்டவாறு தெரிவத்தார்.
அவர் தொடரந்தும் கருத்துரைக்கையில்,
பெ.முத்துலிங்கம் எழுதியுள்ள இந்த நூல்; கடந்த 35 வருடங்களாக அவர் அவ்வப்போது எழுதிய எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். அது விடயதானங்களின் அடிப்படையில் ஐந்து தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆனால் கால ஒழுங்கில்; அவை தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம் ஆகும். பழைய கட்டுரைகளை இப்போது வாசிக்கும்போது வாசகனுக்கு குழப்பததை ஏற்படுத்தும் போக்கு இதில் தெரிகிறது.
காலமும் கருத்தும் முக்கியமானது. அவர் கட்டுரைகள் எழுதப்பட்ட திகதியை கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டு இருந்தாலும் ‘இந்திய வம்சாவளி தமிழ் மக்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்’எனும் கட்டுரை எந்த காலத்தில் எழுதப்பட்டது என நூலிலே குறிப்பிடப்படவில்லை. மலையகம் 200 காலகட்டத்தில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்து இருக்கும் மலையக இன அடையாளம் குறித்த உரையாடலுக்கு திகதி குறிப்பிடப்படாத இந்த கட்டுரை பெ.முத்துலிங்கததின் குழப்பகரமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது.
அவர் ‘இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்’எனும் ஒரு சொல்லாடலை ஆங்கிலத்தில் பயன்படுத்தும்போது கூறுகிறார். தமிழில் ‘மலையகத தமிழர்’என்கிறார். அதனால் அவருக்கு ஏதேனம் வாய்ப்புகள் அமையாலம். ஆனால், அரசியல் ரீதியாக பெரும் போராட்டத்துக்கு மத்தியில்வளர்த்தெடுக்கப்ட்டுள்ள இனத்துவ அடையாளம் ‘இலங்கை மலையகத் தமிழர்’ என்பதாகும்.
இலங்கையில் இரண்டு நாட்டுரிமை போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் இருந்து பிரிந்து செல்வதற்கான ஆயுத போராட்டத்தை நடாத்த்pனார்கள் மலையகத் தமிழர்கள் இலங்கையில் தங்களை முழுமையான பிரஜையாக ஏற்றுக்கொள்ளுங்கள் என தமது பிரஜாவுரிமை போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுத்தார்கள். இவை இரண்டுமே 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது.
இலங்கைத் தமிழர்கள் அவர்களது தனிநாட்டு; கோரிக்கையை கைவிட்டார்கள். மலையகத் தமிழர்கள் 2009 ஆம் ஆண்டு 5ஆம் 6ஆம் இலக்க சட்டங்களின் ஊடாக இலங்கை பிரஜாவுரிமை பிரச்சினையை தீர்த்தார்கள். இப்போது அவர்கள் அர்த்தமுள்ள குடியுரிமையை நோக்கிய போராட்டங்களை நடாத்தும் காலமாகும். அதில் இன அடையாளம் குறித்த போராட்டம் பிரதானமானது. அது வெறும் உரையாடல் மாத்திரமல்ல.
இலங்கைக் கொள்கை வகுப்பாளர்கள் பிரத்தானியர், இந்தியர்கள் இருவரையுமே அந்நியர்களாக பார்த்தார்கள். அதனால்தான் இந்தியர்களான மலையகத் தமிழர்களின்; குடியுரிமை பறிக்கட்டது. இன்றும் இலங்கை தேசிய கொள்கை வகுப்பாளர்களிடம் அந்த மன நிலை உள்ளது. 2018 ஆணடு வகுக்கப்பட்ட ஆரம்ப சுகதாரம் தொடர்பான கொள்கை பிரகடமனம் ஒன்றில் ‘பெருந்தொட்ட இந்திய குடிபெயர் தொழிலாளர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் மன நிலையில் மலையக தமிழ் மக்களை அந்நியர்களாக காட்டும் தொடர் நிலையை ‘இந்திய தமிழர்’ அடையாளம் தொடர்ந்நுதம் செய்து வருகிறது. அதனை மாற்றி அமைக்க ‘இலங்கை மலையகத் தமிழர்கள்’ என சனத்தாகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்யும் பிரேரணையை பாராளுமன்றில் முன்வைக்க வேண்டும் நான் முன்வைத்தபோது அதனை சபைக்கு வராமல் பாரத்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை இப்போது மலையகத் தமிழர் என்பதை ஏற்றுக்கொண்டால் அதனை விருந்தகங்களிலும் மண்டபங்களிலும் பேசுவதில் பயனில்லை. அதனை பாராளுமனறில் பிரேரணையாக முன்வைக்க வேண்டும். மேலும் அரசியல் அதிகாரம் தொடரபில் நிலத்துடன் கூடிய அதிகார அலகு குறித்தே யோசனை முன்வைக்கப்பட வேண்டும். முத்துலிங்கம், கௌதமன் போன்றவர்களின் ஆலோசனையும் கூட்டணி முன்வைத்திருக்கும் சமுதாய சபை அரசியல் ரீதியாக ஏற்படையது அல்ல. இந்த நூலு; பல்வேறு தடுமாற்றங்களுடன் முன்வைக்கப்பட்டாலும் பல உணமைகளைப் பேசுகிறது. மலையகத் தமிழர்கள் இந்திய சமுதாயத்தினர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஓர் இனமாக (டில நவாniஉ) இலங்கை மலையகத் தமிழர் என்ற அடிப்படையிலே அரசியல் ரீதியான நிலைப்பாட்டை எடுத்தல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
