மலையக கவிஞர்களுக்கான அரிய வாய்ப்பு – கவிதைத்தொகுப்பு நூலிற்குக் கவிதைகள் வரவேற்பு

இளம் மலையகத் தமிழ்க் கவிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு சிறு முயற்சியாக கவிதைத் தொகுப்பு நூல் ஒன்று தமிழகத்தில் வெளியாகவுள்ளது. அதில் மலையகத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளர்கள் தத்தம் கவிதைகளை எழுதி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் ISBN எண்ணுடன் நூலாக வெளியிடப்படும்.

கவிதை அனுப்புவோர் கவனத்திற்கு

1.    கவிதை தங்களது சுயமுயற்சியால் படைப்பட்டதாக இருக்கவேண்டும். முன்பு வேறு எங்கும் வெளியிடப்படாத கவிதையை மட்டுமே அனுப்பவும்.

2.    MS Word Documentஇல் Bamini / unicode (latha) எழுத்துருவால் கவிதையைத் தட்டச்சு செய்து karthikjeyapal98@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். அனுப்பிவிட்டு அலைப்பேசியின் வழி உறுதிப்படுத்துதல் நலம்.

3.    கவிதை வரிகள் பற்றிய கவலை தேவையில்லை; விருப்பப்படி அமைக்கலாம். மேலும் ஒருவர் எத்தனைக் கவிதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம். நூலாக்கக்குழுவின் பரிந்துரையின் பேரில் தெரிவான கவிதைகள் மட்டும் வெளியிடப்படும்.

4.    10.07.2022 ஆம் நாளுக்குள்ளாக அனுப்பவேண்டும்.

5.    மலையகத்தில் வாழும் இளம் தமிழ்க் கவிஞர்களுக்காக இந்நூல் உருப்பெறுவதால் விருப்பமுள்ள மலையகத் தமிழர்கள் மட்டும் எழுதி அனுப்பவும்.

6.    கவிதையை அனுப்பும்போது கவிஞர் பெயர், பிறந்த ஊர், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கட்டாயம் அனுப்புதல் வேண்டும்.

Related Articles

Latest Articles