” மலையக தமிழருக்கு தேவை அனுதாபமல்ல, நியாயம்.!” (உரிமைகள்) என்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் கூற்று முற்போக்கானது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மலையகம் 200 ஐ முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியால் நேற்று முன்தினம் ஹட்டன் பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க,
” ” மலையக தமிழர்களுக்கு தேவை அனுதாபம் அல்ல, சுயமரியாதையுடன் வாழ்க்கூடிய சமஉரிமையாகும். அம்மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை நாம் நிச்சயம் சரிசெய்வோம்.” – கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே இதனை மனோ கணேசன் வரவேற்றுள்ளார்.
