” மலையக தொழிலாளர் முன்னணி ஊடாக சேகரிக்கப்படுகின்ற தோட்டத் தொழிலாளர்களின் சந்தா பணத்துக்கு என்ன நடக்கின்றது? நிதி அறிக்கை ஏன் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் மகள் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழல், மோசடி அம்பலமாகிவிடும் என்ற அச்சம் காரணமாகவே நிதி அறிக்கை தொடர்ந்தும் மறைக்கப்பட்டுவருவதாகவும், இது பற்றி உயர்பீடம் வாய் திறப்பதே இல்லை எனவும் அனுசா சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய சபைக் கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டதா, இல்லை. மக்களுக்கு சேவைசெய்யவேண்டிய இடத்தில் பணம் தேடுபவர்கள் இருந்தால் , பணம் மட்டுமே அவர்களின் குறியாக இருக்கும் எனவும் அனுசா விசனம் வெளியிட்டார்.
அத்துடன், தனக்கு வாக்களித்த அதேபோல் ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் அரவணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை முன்னெடுப்பேன் எனவும் அனுசா குறிப்பிட்டுள்ளார்.