மலையக மக்களின் சாபத்தால்தான் ஐக்கிய தேசியக்கட்சி இன்று காணாமல்போயுள்ளது என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நல்லாட்சியின்போது 50 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாமல்போனமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” எமது மக்களுக்கு அந்த தொகையை வழங்காததால்தான் ஐக்கிய தேசியக்கட்சி கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. எமது மக்களின் சாபத்தால் ஒருவர்கூட அக்கட்சியின் சார்பில் இன்று பாராளுமன்றத்தில் இல்லை.” – எனவும் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவ்வாறு இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
