இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஸ்சொமடோ அக்கியோவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் மரியாதை நிமித்தம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் ஜப்பான் தூதரகம் , மலையக மக்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியது குறித்து செந்தில் தொண்டமான் நினைவூட்டியதுடன், மலையக மக்களுக்காக தொடர்ந்தும் வலுவான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் புதிய ஜப்பான் தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ள நிலையில், மலையகத்திற்கு முதல் விஜயம் மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.










