ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் 2 ஆம் திகதி வெளியிடப்படுகின்றது.
அந்த விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு பிரச்சினை தொடர்பில் நாமலின் அணுகுமுறை விவரிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், மலையக மக்களுக்கான முன்மொழிவுகளும் இடம்பெறவுள்ளன.
அதேவேளை ஒற்றையாட்சியை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் நாமல், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பகிரப்படமாட்டாது எனவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










