“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவேன்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தலவாக்கலையில் இன்று நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று தமிழ் மொழியில் உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.
“ மலையக மக்களோடு தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. இலங்கையில் வாழும் மலையக சமூகத்தை நான் பாதுகாப்பேன். அவர்களுக்கு நில உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். மொழி உரிமை, கலாசார உரிமை, கல்வி உரிமை என சம உரிமைகள் வழங்கப்படும்.” – எனவும் சஜித் தமிழ் மொழியில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
