பெருந்தோட் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்கு எந்த இடத்திலும் நான் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” பெருந்தோட்ட தொழிலாலாளர்களுக்கு 750 ரூபா கிடைக்கின்றது. இத் தொகையுடன் இன்னும் 250 ரூபா சேர்த்து கொடுப்பதற்கு நான் எங்குமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நான் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்தப்படியால் கடந்த 2016 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது அமைச்சியின் கீழ் இயங்கும் தேயிலை சபை மூலம் 500 மில்லியன் ரூபா கடனாக பெற்றுக் கொடுத்தேன்.
அது மாத்திரமில்லாமல் 50 ரூபா பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக மேலும் 600 மில்லியன் ரூபா ஒதுக்கினேன். அந்த வேளையின் போது நாட்டில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் ஆட்சி மாற்றதை சர்வாதிகாரமாக கொண்டுவந்ததால் அந்த பணம் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாமல் போய்விட்டது.இந்த விடயம் திகாம்பரத்திற்கும் நன்கு தெரியும்.
அரசியல் இலாபம் பெறுவதற்ககாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக திகாம்பரம் கூறி வருகின்றார்.
மலையக மக்கள் எனது மக்கள் அவர்கள் தமிழராக இருதாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் எனது தொகுதி மக்கள் அவர்களுக்கு 250 ரூபா சம்பளம் அதிகரித்தால் நான் ஒரு பௌத்தன் என்ற ரீதியில் மகிழ்ச்சியடைவேன்.
அத்தோடு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியதோட்ட தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்க கூட்டமைப்பும் முதலாளிமார் சம்மேளனமும் செய்துக்கொள்ளும் கூட்டு ஒப்பந்தம் மூலமேசம்பள உயர் தீர்மானிக்கப்படும்.அந்த கூட்டு ஒப்பந்தத்தில் திகாம்பரம் இல்லை.
அவர் வேண்டுமானால் அவரின் தொழிற்சங்க அங்கத்தினரின் பலத்தை பயன்படுத்தி சட்ட ரீதீயாக இவ் ஒப்பந்தத்தில் இணைந்துக் கொள்ளலாம். நான் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டும் . என முதலாளிமார் சம்மேளனத்திற்கு கோரிக்கை முன் வைத்தேன். கூட்டு ஒப்பந்தத்தின் மூலமே தீர்மானிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
திகாம்பரம் அரசியல் இலாபம் தேடுவதற்காக என் மீது சேரு பூசுகின்றார். நான் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர் களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்துள்ளேன்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பீடம் என்னை இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நியமித்துள்ளது. இதன்படி எதிர்வரும் கூடுஒப்பந்தத்தில் கலந்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயமாக சகோதர பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.என கூறினார்.
