மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுவன் தினமான நேற்று மின்னஞ்சல் மூலம் குறித்த கடிதம் அனுப்பட்டுள்ளது.
இதற்குரிய நிகழ்வு தெல்தோட்டை, லூல்கந்தூர பகுதியில் இலங்கையில் முதன்முதலில் தேயிலையை பயிரிட்ட ஜேம்ஸ் டெய்லரின் சிலைக்கு முன்னால் நடைபெற்றது.
மனிதவள அபிவிருத்தி ஸ்தாபன நிறுவனத்தின் பணிப்பாளர் பி.லோகேஸ்வரி மற்றும் லூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் எம்.மகேந்திரன் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினர்.
லூல்கந்தூர பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் மேற்படி கடிதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
க.யோகா