உயர்தர மாணவியொருவரின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையொன்று கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் களவாடப்பட்டுள்ளது.
குறித்த மாணவி நுவரெலியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் பயின்று வருகிறார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பரீட்சைக்கு முகங்கொடுக்க தேசிய அடையாள அட்டை அவசியம். எனவே அதனை பெற்றுக்கொள்வதற்க்காக கொழும்பு பத்தரமுல்லயில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்திற்க்கு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் பேருந்தில் வந்த நபரொருவர் மாணவியின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை திருடிச்சென்றதால் இவர் பெறும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதுடன், அடையாள அட்டை பெறும் முயற்சியை கைவிட்டு சோகத்தோடு வீடு திருபியுள்ளார்.
அதே சமயத்தில் அங்குள்ள பலவேறு நபர்களின் பைகள் மற்றும் தொலைபேசிகள் காணாமல் போனதாகவும் தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்திருந்தனர்.
தேசிய அடையாள அட்டைக்கான ஆவணங்கள் தொலைந்தமை தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவி முறைப்பாடு செய்துள்ளதுடன் கொழும்பில் ஏற்ப்பட்ட பாரதூரமாக திருட்டு சம்பவம் தொடர்பாகவும் எடுத்துரைத்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி நாட்டின் நெருக்கடியை கவனத்தில் கொண்டு மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், பொது போக்குவரத்தில் ஈடுபடும் போது தமது பைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் அதே நேரத்தில் பெறுமதியான தங்க நகைகளை அணிந்து வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்கே கவிஷான் –










