இலங்கை இராணுப் படையணிகளுக்கிடையில் வருடந்தோறும் நடைபெறும் தேசி விளையாட்டுப் போட்டி அண்மையில் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இதன்போது இராவணத்தின் பொது சேவைப் படையணியைப் (பொது சேவா பலக்காய) பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்ட பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்பிரிங்வெளி தோட்டத்தின் மேமலைப் பிரிவைப் பிறப்பிடமாகக் கொண்ட மூர்த்தி தமிழ்ச்செல்வி என்ற வீராங்கனை இரு வெண்கலப் பதக்கங்களை வெற்றிக் கொண்டு மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரது குழு 4× 400 அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளதோடு, 10 கிலோமீற்றர் போட்டி நடைப் போட்டியில் 3ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
ஸ்பிரிங்வெளி, மேமலைப் பிரிவில் இயங்கும் மலைக்குயில் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட வீராங்கனையாக இவர் மாகாண, தேசிய மட்டப் போட்டிகளில் வெளிப்படுத்தி திறமையை அடிப்படையாகக் கொண்டு இலங்கை இராணுவ கரப்பந்தாட்ட அணிக்கு உள்வாங்கப்பட்டார்.
மெய்வல்லுனர் போட்டிகளில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக குறித்தப் போட்டிகளில் பங்குபற்றி பதங்களை வென்றுள்ளார். இவ்வீராங்கனை வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய அதிபரும், உடற்கல்விப் பயிற்றுவிப்பாளருமான் சுந்தராஜிடம் கரப்பந்தாட்டப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.