‘மழைக்கு மத்தியிலும் தடுப்பூசி திட்டம் முன்னெடுப்பு – மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு’

அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வட்டவளை மற்றும் குயில்வத்தை கிராம சேவகர் பிரிவுகளில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் (சினோபாம்) 2ஆவது அலகு ஏற்றும் பணி இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பபட்ட குயில் தமிழ் மகா வித்தியாலயத்தில் வைத்தே தடுப்பூசி ஏற்றப்பட்டது.

கொட்டும் மழையினையும் பாராது சுகாதார பிரிவினர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன், மக்களும் ஆர்வமாக பங்கேற்றிருந்தனர்.

இதன் போது இந்த பகுதியில் சைனோபார்ம் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட சுமார் 1165 பேருக்கு இரண்டாவது டோஸ் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles