‘மழை தொடர்ந்தால் ஹட்டன், கொட்டகலை நகர வீதிகளில் மீன் குஞ்சுகள் வளர்க்கலாம் போலும்….’

நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக , பிரதான வீதிகளில் நீர் வழிந்தோடக்கூடிய முறையான வடிகாண் அமைப்புகள் அமைக்கப்படாமையின் காரணமாக வாகன சாரதிகள்  மாத்திரமின்றி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் கொட்டக்கலை மற்றும் ஹட்டன் நகரங்களில்  இந்நிலைமை மோசமாக உள்ளது.  தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக வீதி எங்கும் நீர் வழிந்தோடி செல்வதனால் பாதசாரிகள் குறித்த வீதியில் பயணிப்பதை பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய நிறுவனங்களின் பிரதானிகள் உரிய நடவடிக்கைகளை துரிதக் கதியில் முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வேண்டுகோள் விடுகின்றனர்..

அது மாத்திரமல்ல ஹட்டன் நகரில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் பாரிய குறிகள் காணப்படுவதால் அங்கும் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பயணிகள் மட்டுமல்லாது வாகனங்களும் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன . கடந்த பல மாத காலமாகவே குறித்த பிரதேசத்தில் காணப்படும் குழிகளை மூடுவதற்கு அல்லது அங்குள்ள வீதிகளை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நிருபர் – கௌசி

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles