மஸ்கெலியாவில் மீன்பிடிக்கச்சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கென்யோன் நீர் தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற வேளையில் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாள்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத் தைச் சேர்ந்த மூக்கையா கனகேஸ்வரன் என்ற இரண்டு குழந்தைகளின் தந்தை கடந்த 15 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து கென்யோன் நீர் தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற வேளையில் நீரில் மூழ்கிக் காணாமல் போய் உள்ளார் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அவரது மனைவி 16 ஆம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

நீரில் மூழ்கிய நபரை தேடும் பணி விசேட படையினர் மூலம் முன்னெடுக்கப் பட்ட போதும் அவரது சடலம் கிடைக்க வில்லை. அதனால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அவரது சடலம் நீர் தேக்க பகுதியில் மிதந்தது. அதனைய டுத்து ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் தமயந்தி நேரில் பார்வை இட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

நேற்று மதியம் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்நிலையில் பிரேதபரிசோ தனை மேற்கொள்ளப்படவிருந்தத்தாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles