மஸ்கெலியா சுகாதார பிரிவில் மேலும் 51 பேருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 56 பேரும், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 51 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹட்டன், ராகல, பொகவந்தலாவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 127 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 35 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Paid Ad
Previous articleமாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிப்பு! ‘பார்’களுக்கும் தொடர்ந்து பூட்டு!!
Next articleநாட்டில் மேலும் 67,615 பேருக்கு நேற்று தடுப்பூசி ஏற்றல்