மஸ்கெலியா பகுதியில் வாழும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவிருந்த சதொச விற்பனை நிலையம், மஸ்கெலியா நகரில் நாளை (08) திறக்கப்படவுள்ளது.
வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோவால் குறித்த விற்பனை நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.
சதொச நிறுவன் தலைவர், மஸ்கெலியா நகர வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்