மஸ்கெலியா நகருக்கு வெளி வியாபாரிகள் வரத்தடை!

தீபாவளி பண்டிகை விற்பனைக்காக மஸ்கெலியா பிரதேச சபை எல்லைக்குள் வெளி மாவட்ட வியாபாரிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மஸ்கெலியா நகரில் நடைபாதை வியாபாரம், வர்த்தக நிலையங்களை வாடகைக்கு விடுதல் ஆகியவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும், இவற்றை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக்கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம சேவருக்கும் தகவல் வழங்க வேண்டும்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Paid Ad