” நாட்டில் தற்போது தேசிய மக்கள் சக்தி சூறாவளியே வீசுகின்றது. ராஜபக்சக்களின் அரசியல் இந்நாட்டில் செல்லாக்காசாகிவிட்டது.” – என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் மஹிந்த சூறாவளி அல்லது வேறு சூறாவளி ஏற்படக்கூடும் என மஹிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசியல் வாதிகள் பெயரை மாற்றிக்கொண்டு எந்த வழியில் வந்தாலும் , கட்சிகளின் அரசியல் இருப்பை மக்களே தீர்மானிப்பார்கள். நறுமணம் எது, நாற்றம் எது என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இனியும் அரசியல் எதிர்காலம் இல்லை. எனவே, புதிய தோற்றத்துடன் வந்தாலும் மக்கள் விழிப்பாகவே இருக்கின்றனர். ராஜபக்சக்களின் அரசியல் இந்நாட்டில் முடிந்துவிட்டது.
இந்நாட்டில் எம்மைவிட சிறந்த கொள்கையுடையவர்களால்தான் இனி ஆட்சிக்கு வரமுடியும். பழைய கட்சிகளால் அது முடியாது.
அதேபோல மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசமைப்பு இயற்றப்படும்.” – என அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.