மஹிந்தவின் பாதுகாப்புக்கு 180 இற்கு மேற்பட்ட பொலிஸார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் பின்வரும் பலன்களை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்துக்கும், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் செயலக கொடுப்பனவுக்கும் உரித்துடையவர்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், Mercedes Benz -600 maybatch (B/P) car 2008, Toyota Land Cruiser – 2017, Mercedes Benz – G63 AMG 4*4 2850 jeep 2013 ஆகிய 03 வாகனங்கள் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 1950 லீற்றர் வழங்கப்படுவதுடன், அந்த வாகனங்களுக்காக மூன்று சாரதிகள் வழங்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது.

அதற்காக தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களுக்கு மேலதிகமாக 180 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் 29 பொலிஸ் சாரதிகளும் கடமையில் உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மதிப்பிடுவதற்கு தற்போது அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இது தொடர்பில் தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles