” மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை எம்மால் இலகுவில் செய்துவிட முடியும். ஆனால் அவ்வாறான எந்தவொரு முயற்சியும் இடம்பெறவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றார். அவருடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஜனாதிபதி, பிரதமர் பதவி ஆசையில் திரியும் ஒரு சிலரே இப்படியான வதந்திகளை பரப்பிவருகின்றனர். மக்கள் ஆதரவுமூலமே மஹிந்தவை பிரதமர் ஆக்குவோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
