மஹிந்த, சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்!

“ சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருகின்றன. மைத்திரி, மஹிந்த மற்றும் சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும்.”

இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

“ உலக முயற்சியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். ஆனால் ஊழல்வாதிகளை பாதுகாக்க கூடாது. அவர்கள் சுதந்திரமாக சுற்றிதிரிவதற்கு இடமளிக்கவும் கூடாது.

எனவே, முயற்சியாளர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல்தான் ஊழல்வாதிகளுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேங்காய் திருடினாலும் குற்றம்தான், மாங்காய் திருடினாலும் குற்றம்தான். டயமன்ட் திருடினாலும் குற்றம்தான். எனவே, அது சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என குற்றத்தை பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான்.

கடந்தகாலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. எனவேதான் தம்மை தற்காத்துக்கொள்வதற்காக கள்வர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கான கூட்டணி அல்ல. மாறாக கள்வர்களை காப்பதற்கான கூட்டணியாகும்.

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள், ஜனநாயகம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பான செயலாகும். நாட்டில் இன்று நீதி கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுகின்றது. எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை.

சட்டம் தனது கடமையை செய்வதற்குரிய வளங்களை நாம் வழங்கி வருகின்றோம். ஜனநாயகம் பற்றி எதிரணிகள் எமக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை. ஜனநாயகம் என்றால் என்னவென்பதை செயலில் காட்டியவர்கள் தான் நாம். கடந்த இரு தேர்தல்களின்போது ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்பட்டது என்பது முழு உலகமும் அறியும்.” – என அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles