மஹிந்த பதவி விலகக்கூடாது – அலரிமாளிகை முன் அணிதிரண்ட ஆதரவாளர்கள்! (Video)

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தியும் அலரிமாளிகைக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களாலேயே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

” போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ச நாட்டுக்கு தேவை, அவர் பதவி விலகக்கூடாது.” என போராட்டக்காரர்கள் ஆதரவு கோஷம் எழுப்பினர்.

” டயஸ் போராக்களின் பணத்தை பெற்றே கோல்பேஸில் போராட்டம் இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் முன்னிலை சோசலிசக் கட்சியும் செயற்படுகின்றது. எனவே, இதற்கு அடிபணித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கூடாது.” என போராட்டத்தில் பங்கேற்ற பிரதேச சபை தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles