‘மஹிந்த பதவி விலகல்’ – தேர்தல் ஆணையருக்கு தகவல் வழங்கப்பட்டது…

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ, எம்.பி. பதவியை இராஜினாமா செய்திருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

2021, நவம்பர் 25ஆம் திகதி முதல் அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்திருப்பதாக இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1981ஆம் ஆண்டு ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (1)ஆம் பிரிவின் பிரகாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது பற்றி அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles