இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்று போட்டிகளில் இலங்கை அணிக்கான ஆலோசகராக செயற்பட்டு வருகிறார்.
எவ்வித அறவீடுகளும் இன்றி இலவசமாக இலங்கை அணிக்காக அவர் ஆலோசகராக செயற்பட்டு வருகிறார்.
இலங்கை அணி இன்று முதற்சுற்றுப் போட்டிகளில் தனது இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் விளையாடவுள்ள நிலையில் இதனை தொடர்ந்து மஹேல ஜயவர்தன நாடு திரும்ப தீர்மானித்துள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரை தொடர்ந்து மஹேல இலங்கை அணியுடன் இணைந்துக் கொண்டார்.
அணியுடன் இணைந்து செயற்பட்ட குறுகிய காலப்பகுதியில் அணியில் பல்வேறு மாற்றங்களை மஹேல மேற்கொண்டிருந்த நிலையில் அதில் விசேடமாக அவிஷ்க பெர்ணாட்டோவை 4 ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறக்க தீர்மானித்ததை குறிப்பிடலாம்.










