மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தென்னாபிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான மார்க் பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜனவர்தனவின் இடத்திற்கே பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். மஹேல ஜயவர்தன, மும்பை இந்தியன்ஸின் அனைத்து அணிகளுக்குமான செயல்திறன் தலைமையாளராக புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள டி20 லீக் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள டி20 தொடர்களில் அணிகளை வாங்கியுள்ளது. எனவே, அந்த இரண்டு அணிகளுடன் மொத்தமாக மூன்று அணிகள் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கீழ் விளையாடவுள்ளன.
மார்க் பௌச்சர் தென்னாபிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டுவரும் நிலையில், அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்தின் பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










