‘மாணவர்களுக்கு தடுப்பூசி திட்டம்’ – நாளை இறுதி முடிவு!

பாடசாலை மாணவர்களில் எந்த பிரிவினருக்கு முதலில் தடுப்பூசி ஏற்றுவது என்பது தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார்.

” நாளை நடைபெறும் கூட்டத்தின்போது, முன்பள்ளி முதல் தரம் 6வரையா மாணவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்துவதா அல்லது தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்கு செலுத்துவதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். உரிய ஆய்வுகளின் – பரிந்துரைகளின் பின்னர் இறுதி தீர்மானம் எட்டப்படும்.” -என்றும் அமைச்சர் கூறினார்.

Paid Ad
Previous articleவெளியக பொறிமுறையை ஏற்கவே மாட்டோம் – இலங்கை திட்டவட்டம்
Next articleகடைசிப் போட்டியில் தென்னாபிரிக்கா அபரா வெற்றி : தொடரைக் கைப்பற்றியது