பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, புதிய டெல்டா திரிபின் உப பரம்பரை பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலைகளுக்குள்ளும் வெளியிலும் மாணவர்கள் கூடுவதை கட்டுப்படுத்தி,நோய் பகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கால்விரல்களில் இரத்தக் கட்டிகள் உருவாகின்றமை தெரியவந்துள்ளது.மேற்கத்தேய நாடுகளிலும் இவ்வாறான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இலங்கையிலும் சுமார் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் வைத்தியர் வருண குணதிலக தெரிவித்துள்ளார்.