மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் ஹட்டனில் கைது!

ஹட்டன்​- மாணிக்கவத்தையில் அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, டிக்கோயா மற்றும் நோர்ட்டன் பகுதிகளை சேர்ந்த 43, 47, 55 மற்றும் 65 வயதுடைய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles