சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 39 காலபெதிகெடிய, நன்னபுராவ, பிபிலை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது குறித்த நபர் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் லுணுகலை ஹொரேகந்துர எல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டதாகவும் குறித்த நபர் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுபவர் என்றும் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடும் போது அவர் விடுமுறையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்
