பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,
” சம்பளத்துடன் பின்வரும் இரண்டு உத்தரவாதங்கள் இருந்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் எதுவும் நியாயமான நாட்சம்பளமாக அமையாது. ஏனென்றால், இது “நாள் சம்பளம்”..!
1) வருடத்துக்கு 300 நாள், அதாவது ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம்
“25 நாள்” வேலை வேண்டும்.
2)ஒவ்வொரு நாளும் தொழிலாளி கொண்டுவரும் தேயிலை கொழுந்து, இறப்பர் பால் “நிறை” தொடர்பில் உடன்பாடு இருக்க வேண்டும்.” – என்றுள்ளது.










