மாத்தளையில் பிணத்தை வைத்து பிழைப்பு நடத்தியவர் கைது!

மாத்தளை பிரதேசத்தில் தகனகிரியைகளினபோது பண மோசடி இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுகளையடுத்து மாநகரசபை பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இடுகாட்டில் தகனகிரியைகளின் போது , சடலமொன்றுக்கு மேலதிகமாக 5,000 ரூபா அறவிடப்படுவதாக தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட மாத்தளை மாநகர சபை பணியாளர், மாத்தளை மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை மாநகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் வசிப்போரிடம் தகனகிரியைகளின் போது 20 ஆயிரம் ரூபாவும், மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்படாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடம் சடலமொன்றுக்கு 25 ஆயிரம் ரூபா அறிவிடப்பட வேண்டும்.

எனினும்,மாத்தளை மாநகரசபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் சடலத்தை எரியூட்டுவதற்கு 25,000 ரூபா என்றடிப்படையில் போலியான பற்றுசீட்டுகளை தயாரித்து, அதனூடாக சடலமொன்றுக்கு 5000 ரூபா என்ற அடிப்படையில் மோசடி செய்துள்ளார்.
இதன்படி இவர் இதுவரை ரூ. 550, 000 மோசடி செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் பொதுச்சொத்து சட்டம் 1982ஃஎண் 12 இன் கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles